16 March 2018

முதல்முறையாக சிமாட் வகுப்பறைகள் இன்று மாணவர்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டது

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரிக்கான சிமாட் வகுப்பறைகள் இன்று 2018.03.15 கையளிக்கப்பட்டன 

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு வாழ்வாதார உதவிகள்


தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.


தேசிய நல்லிணக்க அமைச்சினால் 17.6 மில்லியன் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைபாட்டு அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 17.6  மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


உடைக்கப்பட்ட பாடசாலை மதில் விமானப்படையினரால் மீள் நிர்மாணம்

கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையின் மைதான காணியில் அமைக்கப்பட்ட சுற்று மதில் நேற்று முன்தினம் 2018.03.14 இரவு இனந்தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டிருந்த நிலையில் அது மீண்டும் விமானப்படையினரால் மீள்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.

இலங்கையில் 490 வது காவல்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

இலங்கையில் 490 வது காவல்நிலையமாக கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று 2018.03.14 அக்கராயன்குளம் காவல நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் றோசான் பெர்னாண்டோ கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிக்  காவல்துறைமா அதிபர் மகேஷ் வெலிகன்ன மற்றும் வட மாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் கணேசநாதன் ஆகியோரால் இன்று காலை பத்துமணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது

15 March 2018

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று கிளிநொச்சி விஜயம்

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று 13 கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 

09 March 2018

வட மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில்

வடக்கு மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் 2018.03.08 இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இருந்து பெண்கள் தின ஊர்வலம் அமைதியாக கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்திற்கு சென்றடைந்து அங்கு மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்


15 February 2018

கிளிநொச்சி வட்டக்கச்சியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டார்

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.14.02.18 மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வடக்கச்சி பத்து விட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 24 பாஸ்கரன் நிரோசா  வயதுடைய  என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

03 February 2018

கிளிநொச்சி முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று 2018.02.02 காலை ஏ9 பிரதான வீதியில் கிளி நொச்சி  ஆலய முன்றலில் ஆரம்பித்து கரைச்சி பிரதேச சபை வரை நூற்றுக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் ஊர்வலமாக பயணித்து கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்க எதிராக தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

28 January 2018

எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் பரந்தனில்

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று 2018.01.27 மாலை பரந்தன் பொதுச் சந்தையில் பகுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன் கலந்துகொண்டார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இவ் நிகழ்வில்இ பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் சாள்ஸ் நிர்மலனாதன் மாகாண சபை உறுப்பினகளான பசுபதிப்பிள்ளை குருகுலராஜா அரியரத்தினம் கட்சியின் வட்டார வேட்ப்பாளர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்

24 January 2018

கிளிநொச்சியில் சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக் காவலர்கள்

2018.01.23 இன்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.


08 January 2018

யாழ். கிளிநொச்சி பிரபல பாடசாலை மாணவர்கள் இராணுவ பயிற்சியில்

தமிழ்ப் பாடசாலை மாணவர்களை சிறிலங்கா இராணுவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அரச திணைக்களங்களுக்கு நியமனம் பெறுகின்ற உத்தியோகத்தர்களை தலைமைத்துவப் பயிற்சி எனத் தெரிவித்து இராணுவ முகாம்களுக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதனிடையே வடக்கு மாகாணத்தின் இரண்டு பாடசாலைகளின் மாணவர்கள் இராணுவப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

02 January 2018

நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டுள்ளோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேர்தல் கோசங்களாக்காதீர்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தாரதவர்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இந்த விடயத்தை பிராச்சாரத்திற்கு பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



21 December 2017

கிளிநொச்சியில் 9 அரசியல் கட்சிகளும் 1 சுயேட்சை குழுவும் போட்டி.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன. அத்தோடு அன்னலெட்சுமி வனசுரா தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான சுந்திரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.




கிளிநொச்சியில் ஜதேக சிறிலங்கா சுதந்திர கட்சி ஈபிடிபி வேட்பு மனுத் தாக்கல்

உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இறுதி நாளான இன்று 2017.12.21 கிளிநொச்சியில் ஜக்கிய தேசிய கட்சி  சிறிலங்கா சுந்திர கட்சி  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்பன வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் தமிழரசு கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜேவிபி வேட்பு மனு தாக்கல்

உள்ளுராட்சி தேர்தல் கிளிநொச்சியில் இன்று 2017.12.20 தமிழரசு கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  ஜேவிபி என்பன வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களான கரைச்சி  பச்சிலைப்பள்ளி  பூநகரி ஆகிய மூன்று சபைகளுக்கும் வேட்பு மனுத் தாக்ககல் செய்யப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் முதவலாவது வேட்பு மனுத் தாக்கல்.

கிளிநொச்சியில் இன்று 2017.12.18 முதலாவது வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக சுயேட்சை குழுவே இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி  பச்சிலைப்பள்ளி  பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைளுக்கும் மேற்படி குழு சுயேட்சை போட்டியிடுகின்றது.